.



 ன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். 
நம் தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடும் ஒரு பண்டிகை. நாம் இயற்கைக்கு நன்றி செலுத்தும் ஓர் அழகான நிகழ்வு. வருடம் முழுவதும் நமக்கு உதவும்  இன்றியமையாத சூரியனுக்கு நாம் நன்றி தெரிவிக்கும் ஓர் நாள்.பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
 இறைவனுக்கு படையல், கரும்பு, வீரவிளையாட்டு, 
உறவினர்கள் ஒன்று கூடுதல் என்று நாம் தொன்றுதொட்டு கொண்டாடும் ஓர் விழா.
                        இப்படி நாம் கொண்டாடும் ஒரு விழாவை தற்போது நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம். தற்போது பொங்கல் விழா என்றால் தொடர்ந்து நான்கு விடுமுறை, 
தொலைகாட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று தொலைகாட்சி முன்பே சில வீடுகளில் கொண்டாடப்படுகிறது. பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு நாம் எவ்வாறு இவ்விழாவை கொண்டாடிணோம். பொங்கல்பானை படம் போட்ட வாழ்த்து அட்டைகள்,STD பூத்தில் காத்து இருந்து உறவினர்க்கு வாழ்த்து சொன்ன நாட்கள் தான் உண்மையிலேயே அழகான  பொங்கல்! 
உறவினர்களுடன் சேர்ந்து பொங்கல் பானை வைத்து பொங்கலோ பொங்கல் என்று கூவி நாம் கொண்டாடிய பொங்கல் தான் எவ்வளவு அழகு! சாப்பாடு கட்டிக்கொண்டு கானும் பொங்கல் அன்று வெளியில் சென்று ஆயிரம் பேருடன் நாம் கழித்த நாட்கள் தான் எவ்வளவு நினைவுகளை தருகிறது. இவ்வளவு அழகான தருணங்களை தர கூடிய விழாவை நாம் தற்போது ஒரு உயிர் அல்லாத ஒரு சாதனத்தின் முன்பு கொண்டாடுவது எவ்வளவு வருந்ததக்கது! நமது கலாச்சாரம் பாரம்பரியம் என்று அனைத்தையும் மறந்து கொண்டு இருக்கிறோம். இப்படியே போனால் இனி வரும் தலைமுறைக்கு பொங்கல் பண்டிகை ஏன் எதற்கு கொண்டாட வேண்டும் என்றே தெரியாமல் போய் விடும். 
அறுவடை நாள்,
 
அறுசுவை உணவு. நகரத்தில் வாழும் நாம் உழவரை நினைத்து உதயவனைதுதித்து புகழ்வோம் மகிழ்வோம்!

 பொங்கலோ பொங்கல் !!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top