தமிழ் களஞ்சியம் Tamil Kalanjiyam Network: வர்மகலை அழிந்துவிட்டதா:
வணக்கம், வர்மம் அழியவில்லை,
மதுரையில் நோக்கு வர்மம்
தெரிந்த ஒருவர் இருக்கிறர்
அவர் அருகிள் உள்ளவரை நோக்கு வர்மம்
மூலம் எப்படி வீழ்த்துவது என்று செய்துகாட்டினார்
2கி.மீ தூரத்தில் உள்ளவரை எப்படி வீழ்த்துவதென்று
ஜீ தமிழ் தொலைகாட்சியில் செய்து காட்டினார்.
அது மட்டுமல்ல இவர் கேரளாக்கு
சென்று அங்கு நடந்த பல வர்ம கலை
போட்டியில் வென்று தமிழரின்
வலிமையை நிலைநிறுத்தியிருக்கிறார்.
குறிப்பு: நடிகர் கமல்ஹாசன் இந்தியன்
படம் நடப்பதற்கு முன் படத்திற்காக
இவரிடம் சென்று வர்மகலை பயிற்ச்சி பெற்றிருக்கிறார்.
பத்துவகையான வாயுக்கள்.
பிராணன், அபானன், வியானன். உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன்,
நம் உடம்பில் எழுபத்து இரண்டாயிரம் நாடிகள் கிளம்பி உடல் முழுவதும் பரந்து நிற்கின்றன என்றும். இந்த பத்து விதமான வாயுக்கள் இந்த நாடிகளின் ஊடே பாய்கிறதாம்.
ன.இந்த எழுபத்து இரண்டாயிரம் நாடிகள் ஒன்றுடன் ஒன்று இணையும் இடத்தில் (நாடி முடிச்சுக்கள்) இந்த வாயுக்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து நிற்கும். இவ்வாறு இணையும் இடமே வர்ம ஸ்தானங்கள் அல்லது வர்ம புள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வாரு 108 வர்ம புள்ளிகள் உள்ளது. (150 வர்மபுள்ளிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது). இந்த வர்மங்கள் இருக்கும் இடங்களில் தாக்கும் பொழுது , ஒருவரை மயக்கம் அடையசெய்யவோ அல்லது உயிரையும் எடுக்க முடியும்.
நம் உடலில் வர்மங்களை இரு பெரும் பிரிவுகளாக வகைபடுத்தப்படுகின்றன
படுவர்ம் 12
தொடுவர்ம் 96
அக மொத்தம் 108
வர்மங்களை வைத்திய முறைக்கு ஏற்ப மேலும் ஆறு பிரிவிகளாக வகைபடுத்தப்படுகின்றனர்.
வாத வர்மம் 64
பித்தவர்மம் 24
சிலேத்தும வர்மம் 6
உள் வர்மம் 6
தட்டுவர்மம் 6
ஆக மொத்தம் 108
இந்த வர்மங்கள் உடலில் கீழ் கண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
கை,கால் 44
தலை 23
நெஞ்சு,முதுகு 33
மூலம் 8
ஆக மொத்தம் 108
ஒருவருக்கு அடிபட்டோ அல்லது வெட்டுப்பட்டோ இரத்தம் வரும் போது , வர்மகலை தெரிந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட வர்ம புள்ளிகளை தட்டியோ (அ) நீவி விடுவது மூலம் இரத்தம் வெளிவருவதை நிறுத்தி விடலாம்.
வர்ம வைத்தியர்கள் ஒருவரை மயக்கமுற செய்து வைத்தியம் செய்யவேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட வர்ம புள்ளிகளின் மூலம் மயக்கமுற செய்து, வைத்தியம் செய்தபின் ஒரு குறிப்பிட்ட வர்ம புள்ளிகளின் மூலம் விழிப்படைய செய்வார்களாம்.
இன்றைய தினத்தில் பெண்கள் சுகப் பிரசவம் என்பது கேள்வி குறியாக உள்ளது. பெண்களின் சுகப் பிரசவத்திற்கு ஆபானன் என்ற வாயுவின் சரியான இயக்கத்தை பொருத்தே உள்ளது. ஆபானன் வாயுவின் இயக்கத்தை சரிக்கட்டகூடிய வர்மம்களின் மூலம் பெண்ணிற்கு சுகப் பிரசவத்தை செய்து விடமுடியும்.
இருதய அருவை சிகிச்சை (Bypass Surgery ) நிலையிலுள்ள நோயாளிக்கும் இருதயம் சம்பந்தப்பட்ட வர்மங்களின் மூலம் இரத்தநாளங்களின் அடைப்புகளை சரிசெய்து அவரது இருதயத்தை சீராக்க முடியும்.
இப்படிபட்ட தெய்வீக மருத்துவக்கலை அழிந்து வருவது வருத்தத்திற்குரியது.
வர்மக்கலையின் முக்கிய நூல்கள்
வர்ம சூத்திரம்
வர்ம கண்ணாடி
வர்ம பீரங்கி
ஒடிவு முறிவு சாரி
வர்ம கண்டி
வர்ம சூடாமணி
மேலும் பல நூல்கள் அச்சேற்றப்படாமல் சுவடிகளாக உள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.