கர்ப்பப்பை கோளாறுகளின் அறிகுறிகள் என்ன?
கருப்பை கோளாறுகள் பெண்கள் பூப்பு எய்திய நாள் முதல் தோன்ற ஆரம்பித்தாலும் பொதுவாக இந்நோய்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது கணைச் சூடு என்ற விதமாய்த் தொடங்குகின்றன. பழங்கால பாட்டிகள் கணைச்சூட்டுக்கு கற்றாழைச் சாறு கலந்த எண்ணெய்யை வாரம் இருமுறை சாப்பிடக் கொடுப்பார்கள். இந்த முறையில் தற்போது சித்த மருத்துவத்தில் குமரி எண்ணெய் என்ற மருந்தை தயார் செய்து கொடுக்கப்படுகிறது.
இந்த கணைச் சூடு பூப்பு எய்திய காலத்தில் கர்ப்பச் சூடாக மாறும். இதனால் ரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக மாதவிலக்கு மாறுபாடு ஏற்படும். இதனால் கருப்பை சூடு ஏற்பட்டு வெள்ளை ஏற்படுகிறது. நம் சமூகத்தில் இருந்த நல்ல பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க மறந்து ஒவ்வொரு மருத்துவமனையாக ஒவ்வொரு நோயிற்காக தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்
கர்ப்பப் பை வளர்ச்சியில் எப்போது அக்கறை செலுத்த வேண்டும்?
நம் சமுதாயத்தில் பெண் பூப்பு எய்தவுடன் நாள்தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன்னும் சில பேர் உளுத்த மாவில் செய்த உணவுப் பண்டங்களை நாள்தோறும் சாப்பிடச் செய்வார்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்றவற்றைச் சாப்பிட்ட நமது முன்னோர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரீக வாழ்க்கையில் "பாஸ்ட் புட்" கலாசார உணவுகளைச் சாப்பிட்டு உடலாகிய கோயிலை அழித்துக் கொண்டு வருகிறோம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப் பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன; இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்த காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தை பேற்றை ஒரு இயல்பான காரியமாகச் செய்ய முடியும்.
முளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏலக்காய் நெய் சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும்.தேனும் தினைமாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.
நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடும் மருந்துகள் சினைப்பைக் கட்டி, கருப்பைக் கட்டி போன்றவைகள் உருவாகி மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது.
சித்த மருத்துவத்தில் நோய் தீர்க்கும் வழிமுறையும் நோய் வராமல் தடுக்கும் முறையும்...: எஸ்.கே.எம். சித்த மருத்துவமனையில் தேரையர் சித்தர் அருளிய நோய் அணுகா விதிகளை பின்பற்றி வருகிறோம். முதலில் உடலைச் சுத்தம் செய்ய வேண்டும். வாரத்துக்கு இருமுறை (செவ்வாய்-வெள்ளி இரு தினங்கள் மருந்து சாப்பிடும் முன்பு) எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் நம் உடல் சூடு, கண் எரிச்சல், உடலில் ஏற்படும் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும்.
பிறகு ஆண்டுக்கு 2 முறை பேதி மருந்து எடுக்க வேண்டும்.பருவ கால மாற்றத்தால் வரும் நோய்களை வராமல் தடுப்பதற்கு நாங்கள் 3 நாள் பேதி மருந்து கொடுக்கிறோம். நோய்க்குத் தக்கவாறு கலிங்காதி தைலம், மலை வேம்பாதி தைலம், லவணகுணாதி எண்ணெய், சித்தாதி எண்ணெய், அகத்தியர் குழம்பு போன்றவற்றை உடல் நிலைக்கு, நோய்களுக்கு, காலத்துக்குத் தக்கவாறு மருந்துகளை வழங்குகிறோம்.
45 நாள்களுக்கு ஒரு முறை நசியம் (மூக்கில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை) செய்கிறோம். மூக்கிற்கும், மூலாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் கருவாய், எருவாய், மலவாய் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. கட்டி, கழலை ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு, செக்ஸ் உறவு பற்றிய போதிய விவரம் தெரியாமை போன்ற காரணங்களினால் அதிக உதிரப்போக்கு, 6 மாதத்துக்கு ஒரு முறை உதிரப்போக்கு,
ஒரு நாள் மட்டும் தீட்டு படுதல், சிறுநீர் கழிக்கும்போது தீட்டு படுதல் போன்ற காரணங்களுக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை செய்து எல்லாம் இயல்பாக இருந்த பெண்களுக்கு நசியம் செய்து கொடுத்து மகப்பேறு அடைந்துள்ளனர்.
மாதவிலக்கு உண்டான 3 நாள்கள் மூலிகை கற்கங்களை காலையில் 6 மணிக்கு நீராகாரம் (அல்லது) மோரில் அரைத்துக் கொடுத்து அநேகம் பேர் மகப்பேறு அடைந்துள்ளனர்.
கலிக்கம் (கண்ணில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை): ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கலிக்கம் செய்கிறோம்.
உடலை நோய் வராமல் இருக்கச் செய்யும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி உடலே Ovulation-I உணரும் வகையில் செய்யலாம்
ENAKU THIRUMANAM AAGI 2 VARUDAM AGIRATHU, INNUM KULANTHAI ILLA, DR. ENAKU KARUBBABAI VAI SIRIYATHAGA ULLATHU ENGIRAR. ATHANAL AAN URUPAU EN ULLE POGAVILLAI, SO ITHARKU TREATMENT THANRUNGAL.
பதிலளிநீக்கு