.

தினசரி நாம் உண்ணும் உணவில் முறையான உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்
மாதவிடாய் க்கான பட முடிவுமாதவிடாய் க்கான பட முடிவு.மாதவிடாய் க்கான பட முடிவுமாதவிடாய் க்கான பட முடிவு
மாதவிடாய் பிரச்சனை நீங்க:
அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிட மாதவிடாய் பிரச்சனை வயிற்று வலி குறையும். 
தாமதமாகும் மாதவிலக்கை வரவழைக்க
சூதகத் தடை (ஹோர்மோன் பிரச்னை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் உரல் அல்லது மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். (அரைக்கும்பொழுது இலேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.
முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
வெங்காயத் தாளை அரைத்து, அதில் கருப்பு எள், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் கலந்து நன்கு காய வைத்து அரைத்துக்கொள்ளவும். மாதவிலக்கு வராத சமயங்களில் ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால் பிரச்னை தீரும். இதைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது.
பிரண்டையை இடித்துச் சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்னைகள் சரியாகும்.
வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.
கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தாமதித்த மாதவிலக்கு சீராகும்.
முடக்கத்தான் கீரைச் சாற்றில் கறுப்பு எள்ளை அரைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்கு உண்டாகும்.
மாதவிலக்கின்போது இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்போது பண்ணைக் கீரையை சமைத்துச் சாப்பிட்டால், அதிகப்படியான இரத்தப்போக்கு கட்டுப்படும்
காதுவலி குணமாக்க: 
ஊமத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
பித்தம் குறைய: விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட பித்தம் குறையும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும்.
வாந்தி நிற்க: கறிவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டிய உடன் கொடுக்க மாந்தம் குறையும். பசி எடுக்கும். துளசி சாறு கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.
ஆரோக்கியமான் கல்லீரல்: தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.
இதயத்திற்கு பலம்: மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல், இதயம் வலுவடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
தூக்கமின்மையை போக்க: நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் சரியாகும். வெங்காயத்தை நசுக்கி அதன் சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட தூக்கம் வரும்.
சிறுநீர் எரிச்சல் போக்க: அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு குணமாகும். அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் சரியாகும். கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.
குடல் புண் நீங்க: வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும். வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும். மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.
சீரான ரத்த அழுத்தம்: டீ, காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
பித்த வெடிப்பு மறைய: அரசமரத்து பாலை பித்த வெடிப்பு மீது தடவி வர குணம் கிடைக்கும். வாழைப்பழம், ஏலக்காய் பொடி செய்து பிசைந்து சாப்பிட வயிற்று வலி சரியாகும். முருங்கை பூவை பாலில் காய்ச்சி சாப்பிட மோகம் ஏற்படும்.
பல் கூச்சம் நீங்க: துத்து இலை அதன் வேரையும் கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல்வலி, பல் கூச்சம், பல் ஆட்டம் சரியாகும். இலந்தை பழம் தினசரி சாப்பிட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும்.
கர்ப்பிணிகளின் பேறுகால வலி குறைய: முருங்கை இலை ஒருபிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு பேறுகால வலி குறையும். தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மாறும் ஆல மரத்தின் இளம் கொழுந்தை மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும்.
கண்வலி போக்க: அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குறையும். எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடம் கண்வலி ஏற்படாது
08 Jul 2015

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top