அழகிய நீளமான,அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்பது நம்மில் பலரது ஆசை. என்றாலும், அதனை பராமரிப்பதற்கான முறைகளை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை.
பராமரிப்பற்ற கூந்தல் மிருதுவற்றதாகவும், பளபளப்பின்றியும் காணப்படுகிறது. இதை இப்படியே விட்டு வைத்தால், தலைமுடி உதிர்வதற்கும், உடைவதற்கும் இதுவே முக்கிய காரணமாகி விடுகிறது.
சில எளிய பராமரிப்பு முறைகளை கீழே தொகுத்தளித்திருக்கிறோம்.
- உங்களது கூந்தல் வறண்ட கூந்தலாக இருந்தால், சாதாரண எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
- வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊற வைத்துக் குளிக்க வேண்டும்.
இவ்வாறான எண்ணெய்க் குளியலுக்கு தேங்காய் எண்ணெய்,பாதாம் எண்ணெய்,நல்லெண்ணெய்,ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை சம விகிதத்தில் கலந்து, மிதமான சூட்டுடன் தலையில் தேய்க்கலாம்.
(இவ்வாறு எல்லா எண்ணெய்களையும் சேர்த்து உபயோகிக்கும்போது, இருபது முதல் இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேல் ஊற வைக்க வேண்டாம்.)
- கேசம் இழந்த பளபளப்பை மீண்டும் பெற,
தேயிலைத் தூளை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, மிதமான சூடு இருக்கும்போது சிறிது சர்க்கரையும், எலுமிச்சம்பழமும் சேர்த்து அதனை தலைக்குத் தேய்த்து ஊற வைத்துக் குளிக்கலாம்.
(இவ்வாறு செய்யும்போது, தேயிலைத்தூளையும், சர்க்கரையையும் 1:1விகிதத்தில் கலக்க வேண்டும். இந்த விகிதத்திற்கு பாதி எலுமிச்சம்பழம் போதுமானது.மேலும், பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஊற வைக்க வேண்டாம்.)
- உங்களுடைய தலைமுடி ஏதேனும் வேதியியல் (Such as COLORING, STRAIGHTENING, PERMING, SMOOTHING) மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் (CHEMICALLY TREATED HAIR), அதற்கென பிரத்யேகமாக கடைகளில் கிடைக்கும் தரமான ஷாம்பூவை உபயோகிக்கவும்.
( சாதாரண தலைமுடியை விட CHEMICALLY TREATED HAIR வலு குறைந்ததாக இருக்கும். எனவே, அதற்கான ஷாம்பூவை உபயோகிப்பது உங்களது தலைமுடியைப் பாதுகாக்கும்.)
- வெந்தயம், நெல்லிக்காய் போன்ற மிக குளிர்ச்சியான பொருள்கள் கூந்தல் பளபளப்பை தக்க வைக்கும் என்றாலும், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது.
- தலையில் காணப்படும் பொடுகு மறைய வசம்பு வெகுவாக உதவும்.இதனை பாலுடன் சேர்த்து அரைத்து தடவினால் பலன் காணலாம்.
- வறண்ட கூந்தலுடையவர்கள் பாலை தலைக்குத் தேய்த்து, ஊற வைத்து பின்னர் குளிக்கலாம்.
- வெங்காயம் பொடுகுப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும். எனினும், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் அதனைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
- எந்த ஷாம்பூ உபயோகித்தாலும், ஷாம்பூவும் தண்ணீரும் 2:1 என்ற விகிதத்திலிருக்க வேண்டும். இவ்வாறிருந்தால், ஷாம்பூவிலிருக்கும் வேதியியல் மூலப் பொருள்களால் தலைமுடிக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
haircare, hair care, beauty tips, tips for hair care, beautiful hair, hair care, கூந்தல் பராமரிப்பு, கூந்தல், ப்யூட்டி, ப்யூட்டி டிப்ஸ், அழகு குறிப்பு, அழகு, நீண்ட கூந்தல், கூந்தல் அழகு, வறண்ட கூந்தல், பொடுகு பிரச்சினை, பொடுகு, COLORING, STRAIGHTENING, PERMING, SMOOTHING
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.