மூக்கு கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம் ஜாதிக்காய் வேப்பங்கொழுந்துஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்..மங்கு படர்ந்த பகுதிகள் மளாரெனமறைந்துபோகும்!
கருவளையம் மறைய
கண்ணுக்கு கீழேயும் கருப்பு வளையம் நமக்கு வெறுப்பான விஷயம் தான்... அதற்கு வெள்ளரி விதைபொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமைகாணாமல் போகும்.
கருமை மாற
முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை எடுத்து மிக்ஸியிலிட்டு சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன்ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்டசருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.
முகத்தில் புதுப்பொலிவுக்கு
தர்பூசணி பழச்சாறு பயற்றமாவு கலவை முகத்தில் பூசப்பட்டு வந்தாலும் புதுப்பொலிவு கிடைக்கும்.
பப்பாளிப்பழமும் அப்படியே முகத்தில் பூச உகந்தது இயற்கையான ஸ்க்ரப் இது.
கழுத்தைப் பராமரிக்க
நம் முகத்தைத் தாங்கும் கழுத்தையும் நாம் கவனிக்கணும் ..ஒரு ஸ்பூன் வெங்கயச்சாறு சிறிது
ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும்.பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய ‘டபுள் சின் ‘ நாளடைவில்‘சூப்பர் சின்‘ ஆகி விடும்!
சிவந்த இதழ்களுக்கு
சின்ன துண்டு பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர இதழ்கள் சிவந்த நிறத்துடன்அழகாகும்.
நகங்கள் பொலிவு பெற
பாதாம் எண்ணை சில சொட்டு நகத்தில் தேய்த்து வர ஆரோக்கியமாய் நகங்கள் வளரும்.பேரிச்சம்பழம்கலந்த பால் சாப்பிட்டு வந்தால் வெளிறிய உடைந்த நகங்கள் கூட நன்கு வளரும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக