.





இயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம்.


சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்.



பருக்கள் மறைய



பொதுவாக பருக்கள் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் ஏற்படுகிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்.



முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்.



செம்பருத்திப் பூ ரோஜா மொட்டுவெள்ளரிக்காய் சாறு
இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதனுடன் பச்சை பயறு மாவு கலந்து குழைத்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம், முகக்கருமை, முகப்பரு, கழுத்துப்பகுதி கருப்பு, முகத்தில் உண்டான தழும்புகள், மூக்கில் ஏற்படும் கருப்பு போன்றவை நீங்கும்.



வேப்பிலை, மருதோன்றி இலை, இரண்டையும் எடுத்து அதனுடன் சிறு துண்டு வசம்பு சேர்த்து மை போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். முடி உதிர்வது குறையும். புழுவெட்டு நீங்கும்.







முகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க  





* பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது முழ்கும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.இவ்வாறு செய்தல் பருக்கள் நாளடைவில் மறையும்.
* சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் நாளடைவில் மறையும்.
*தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.  
*ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு ஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். இது சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீல் மாஸ்க் என்ற பெயரில் செய்கின்றனர்.
* வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானிமெட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிதமான சுடுநீரில் கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும்.
* இரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் தொல்லை நீங்கும்.
* சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம்.
* ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது பருக்களின் வடு மறைய உதவுகிறது.
31 Jul 2014

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top