- மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு - சில
- மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு
- தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்
- சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு
- மோகனமே உன்னைப்போல என்னையாரும் - என்
- மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
- ஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல - எரி
- அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை
- கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்
- கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
- பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்
- பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
- விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்
- வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
- பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்
- பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்
- விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளி
- விந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்
- சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒரு
- தாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்
- சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறு
- சிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்
- கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்
- கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்
- உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
- உள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்
- உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
- உதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்
- உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அது
- உடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்
- உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்
- உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்
- செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி
- தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்
- செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது
- தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?
- எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி
- எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
- இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்
- இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்
- பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்
- பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்
- சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்
- சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்
- எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்
- இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்
- மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்
- வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்
- கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்
- காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்
- துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடி
- தூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்
- பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுக
- பூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்
- கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்
- கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்
- கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்
- குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்
- கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளி
- குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்
- மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணை
- முட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி
- ஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்
- உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி
Home
»
vairamuththu kavithai
» vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு
Related Posts
காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள்,காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், vairamuththu kavithai, காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், vairamuththu kavithai,
01 Jul 20150கா தலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்த...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை இலை ,கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை
23 Jul 20140இலை; ! இன்றோ... நாளையோ... இப்போதோ... பிறகோ... விழுந்து விடுவேன் உயிரின் கடைசி இழையில் ஊசல...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை வழிப்போக்கன், நதி எங்கே வளையும், கரை ரெண்டும் அறியும்.
23 Jul 20140வழிப்போக்கன்; ! உங்கள் பூக்களை வண்டுகளுக்கு முன்பே வாசித்தவர் எங்கே சோலைகளே தேயிலைக் கொழுந்...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை மெழுகுவத்தி,மழைப் பிரசங்கம்
23 Jul 20140மெழுகுவத்தி; ! தனக்காக அல்ல... தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே அந்தத் தாய் அழுகிறாள் மேனி...Read more »
vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால் ,அந்தந்த வயதுகளில்.
23 Jul 20140உன் வெள்ளிக்கொலுசொலி வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்! உன் பார்வை கொஞ்சம் வில...Read more »
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.