- போடி போடி கல்நெஞ்சி!
- மார்புக்கு ஆடை
- மனசுக்கு பூட்டு
- ஒரே பொழுதில்
- இரண்டும் தரித்தவளே!
- காதல் தானடி
- என்மீதுனக்கு?
- பிறகேன்
- வல்லரசின்
- ராணுவ ரகசியம்போல்
- வெளியிட மறுத்தாய்?
- தூக்குக்கைதியின்
- கடைசி ஆசைபோல்
- பிரியும்போது ஏன்
- பிரியம் உரைத்தாய்?
- நஞ்சு வைத்திருக்கும்
- சாகாத நாகம்போல்
- இத்தனை காதல் வைத்து
- எப்படி உயிர் தரித்தாய்?
- இப்போதும் கூட
- நீயாய்ச் சொல்லவில்லை
- நானாய்க் கண்டறிந்தேன்
- இமைகளின் தாழ்வில் -
- உடைகளின் தளர்வில் -
- என்னோடு பேசமட்டும்
- குயிலாகும் உன்குரலில் -
- வாக்கியம் உட்காரும்
- நீளத்தில் -
- வார்த்தைகளுக்குள் விட்ட
- இடைவெளியில் -
- சிருங்காரம் சுட்ட
- பெருமூச்சில்
- வறண்ட உதட்டின்
- வரிப்பள்ளங்களில் -
- நானாய்த்தான் கண்டறிந்தேன்
- காதல் மசக்கையில்
- கசங்கும் உன் இதயத்தை.
- சேமித்த கற்பு
- சிந்தியா போயிருக்கும்?
- நீயாக கேட்டிருந்தால்
- நெஞ்சு மலர்ந்திருப்பேன்
- உண்டென்றால்
- உண்டென்பேன்
- இல்லையென்றால்
- இல்லையென்பேன்
- இப்போதும் கூட
- தேசத்துரோகமென்பதை
- ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி
- உள்ளாடும் காதலை
- ஒளிக்கவே பார்க்கிறாய்
- காதலில்
- தயக்கம் தண்டனைக்குரியது
- வினாடி கூட
- விரயமாதல் கூடாது
- காலப் பெருங்கடலில்
- நழுவி விழும் கணங்களை
- மீண்டும் சேகரிக்க
- ஒண்ணுமா உன்னால்
- இந்தியப் பெண்ணே!
- இதுவுன்
- பலவீனமான பலமா?
- பலமான பலவீனமா?
- என்
- வாத்தியக்கூடம்வரை
- வந்தவளே
- உன் விரல்கள்
- என் வீணைதடவ வந்தனவா?
- இல்லை
- புல்லாங்குழல் துளைகளைப்
- பொத்திப்போக வந்தனவா?
- என் நந்தவனத்தைக்
- கிழித்துக்கொண்டோடிச்
- சட்டென்று வற்றிவிட்ட நதி நீ
- உன் காதலறிந்த கணத்தில்
- என் பூமி பூக்களால் குலுங்கியது
- நீ வணங்கிப் பிரிந்தவேளை
- என் இரவு நடுங்கியது
- பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
- காதலையே அறிவித்தாய்
- இருபதா? முப்பதா?
- எத்தனை நிமிடம்?
- என் மார்பு தோய்ந்து நீ
- அழுததும் தொழுததும்
- என் பாதியில்
- நீ நிறையவும்
- உன் பாதியில்
- நான் நிறையவும்
- வினாடித்துகள் ஒன்று
- போதுமே சிநேகிதி
- நேரம் தூரம் என்ற
- தத்துவம் தகர்த்தோம்
- நிமிஷத்தின் புட்டிகளில்
- யுகங்களை அடைத்தோம்
- ஆலிங்கனத்தில்
- அசைவற்றோம்
- உணர்ச்சி பழையது
- உற்றது புதியது
- இப்போது
- குவிந்த உதடுகள்
- குவிந்தபடி
- முத்தமிட நீயில்லை
- தழுவிய கைகள்
- தழுவியபடி
- சாய்ந்து கொள்ள நீயில்லை
- என் மார்புக்கு வெளியே
- ஆடும் என் இதயம்
- என் பொத்தானில் சுற்றிய
- உன் ஒற்றை முடியில்
- உன் ஞாபக வெள்ளம்
- தேங்கி நிற்குது
- முட்டி அழுத்தி நீ
- முகம்பதித்த பள்ளத்தில்
- தோட்டத்துப் பூவிலெல்லாம்
- நீ விட்டுப்போன வாசம்
- புல்லோடு பனித்துளிகள்
- நீவந்துபோன அடையாளமாய்க்
- கொட்டிக் கிடக்கும்
- கொலுசுமணிகள்
- நம் கார்காலம்
- தூறலோடு தொடங்கியது
- வானவில்லோடு நின்றுவிட்டது
- உன் வரவால்
- என் உயிரில் கொஞ்சம்
- செலவழிந்து விட்டது
- இந்த உறவின் மிச்சம்
- சொல்லக்கூடாத
- சில நினைவுகளும்
- சொல்லக்கூடிய
- ஒரு கவிதையும்
Home
»
vairamuththu kavithai
» vairamuththu kavithai கவிஞர் வைரமுத்து கவிதை பூக்களும் காயம் செய்யும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக