.

  • போதிமரம் போதும்
  • புத்தனைப் புதைத்துவிடு

  • கொடிகள் காப்பாற்று
  • தேசத்துக்குத் தீயிடு

  • சின்னங்கள் முக்கியம்
  • சித்தாந்தம் எரித்துவிடு

  • கவிஞனுக்குச் சிலை
  • கவிதைக்குக் கல்லறை

  • உரைபோதும் பிழைப்புக்கு
  • மூலம் கொளுத்திவிடு

  • மன்னனுக்கு மகுடமிடு
  • மக்களுக்கு லாடமடி

  • நீதிமன்றம் சுத்தம்செய்
  • நீதிக்குக் குப்பைக்கூடை

  • கற்றது மற
  • பட்டத்துக்குச் சட்டமிடு

  • பெட்டி தொலைத்துவிடு
  • சாவிபத்திரம்

  • தலைவனைப் பலியிடு
  • பாதுகை வழிபடு

  • அகிம்சை காக்க
  • ஆயுதம் தீட்டு

  • பத்தினிக்கு உதை
  • படத்துக்குப் பூ

  • காதல் கவியெழுத
  • காமம் நாமெழுத

  • கற்பு முக்கியம்
  • கருவைக் கலை

  • பசியை விடு
  • கடிகாரம் பார்த்துண்

  • ஜனநாயகம் காப்பாற்று
  • ஜனங்களைக் கொன்றுவிடு

  • முரண்பாடே நடைமுறையாய்
  • நடைமுறையே முரண்பாடாய்ச்
  • சென்றுதேய்ந்திறுகின்ற சிறுவாழ்வில்
  • முரண்பாடெனக்குள் யாதென்று
  • மூளைபுரட்டி யோசித்தேன்

  • மிருகத்தைக் கொல்லாமல்
  • தேவநிலை தேடுகிறேன்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Top